திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைகிறது?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் திமுக-வுடன் கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 41 இடங்களை ஒதுக்கீடு செய்தது திமுக.

ஆனால் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொள்ள ஸ்டாலின் விரும்பினார்.

கருணாநிதியோ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, எனவே உள்ளாட்சி தேர்தலில் மிக சொற்பமான எண்ணிக்கையில் காங்கிரசுக்கு இடங்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் உண்டானது, இந்த விரிசல் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தும், கருணாநிதியை சந்திக்காமல் சென்று விட்டார்.

இதேபோன்று பொறுப்பு முதல்வர் வேண்டும் என ஸ்டாலின் கூறிய கருத்தையும் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படியே சென்று கொண்டிருக்க நேற்று காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இதில், பெரும்பாலானவர்கள் தனித்து போட்டியிடலாம் என கூறியதாக தெரிகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments