அப்பல்லோவுக்கு இலவச ஆட்டோ சேவை நடத்தும் அதிமுக தொண்டர்!

Report Print Arbin Arbin in இந்தியா

அதிமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் தேறும் வரை இலவசமாக அப்பல்லோவுக்கு சவாரி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனை அதிமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களால் பரபரப்பாக கணப்படுகிறது.

மட்டுமின்றி அதிமுக தொண்டர்களால் மதபேதமின்றி தொடர்ந்து பூஜைகளும் அப்பல்லோ மருத்துவமனை முன்னால் நடைபெற்று வருகிறது.

வழக்கத்துக்கு மாறாக அப்பல்லோ வளாகமே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் கெடுபிடிகளும் மிக அதிகமாக உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா அங்கு சிகிச்சை பெற்று வருவதால் புறநோயாளிகளுக்கு கட்டுப்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விதித்துள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் மொத்தமாக ஜெயலலிதாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சரை சிகிச்சைக்காக அனுமதித்த நாள் முதல் அதிமுக அனுதாபிகள் பலரது அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளது.

ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த 49 வயதான கூலித்தொழிலாளி பொன்ராம் கடந்த ஒரு வார காலமாக வேலைக்கு செல்லாமல், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலேயே சுற்றி வருகிறார்.

பொன்ராம் மட்டுமல்ல, மேலும் பலரும் இதேப்போன்று குறிப்பிட்ட மருத்துவமனையையே கதி என்று உள்ளனர்.

இவர்களில் ஆட்டோ ஓட்டுனர் சுகுமார், தனது ஆட்டோவுடன் அங்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இலவசமாக சேவையை செய்து வருகிறார்.

அப்பல்லோ விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காகவே தாம் இந்த சேவையை செய்து வருவதாக கூறும் சுகுமார், ஜெயலலிதா குணமடைந்து கார்டன் திரும்பும் வரை இந்த சேவை தொடரும் என்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments