ஜெயலலிதா சுயநினைவுடன் உள்ளார்..! பரபரப்பை கிளப்பும் தமிழச்சியின் கேள்விகள்...?

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோமா நிலையில் இல்லை; சுயநினைவுடனே உள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் புளுகித் தள்ளுகிறார் என தமிழச்சி கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா தொடர்பாக தமிழச்சி பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக முதல்வர் ஜெயலலிதா கோமா நிலையில் இல்லை; சுயநினைவுடனே உள்ளார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் கூறுகிறார்.

"மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடனேயே அனைத்து அரசு அறிவிப்புகளும் வெளியாகின்றன."

"டெல்லியில் நடைபெற்ற காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் வாசிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உரைக்கு அவரது ஒப்புதல் பெறப்பட்டது. அத்துடன் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா சுட்டிக் காட்டினார்."

என்று அப்பட்டமாய் புளுகித் தள்ளுகிறார் பொன்னையன்.

உள்ளாட்சி தேர்தல் பட்டியல் அதிகமுவின் அதிகாரப்பூர்வான தளத்தில் வெளியானது. வேட்பாளர்கள் பெயர் பட்டியல்கள் அதில் இடம் பெற்றிருந்தனவே தவிர, ஜெயலலிதாவின் கையெழுத்து ஏன் அதில் இல்லை. ஒரு கட்சி தலைவரின் கையெழுத்து இல்லாமல் வெளியிடப்படும் வேட்பாளர் பட்டியல் எப்படி அதிகாரப்பூர்வமானதாக இருக்க முடியும்?

சுயநினைவுடன் ஜெயலலிதா இருக்கிறார் என்றால் கவர்னர், ஆளும் கட்சி அமைச்சர்கள், ராகுல் காந்தி உட்பட ஏன் அனைவரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை?

'நாளை மோடி வருவார்' என தினத்தந்தி பாண்டே அறிவித்துள்ளார். அவ்வாறான அறிவிப்பு எதுவும் செய்திகளில் அப்போது வரவில்லை. முதல் அறிவிப்பு பாண்டேவிடம் இருந்தே வந்துள்ளது. இதற்கு பிறகே பத்திரிகைகள் அதை செய்தியாக்கி உள்ளன.

மோடி வருகைக்கு காரணம் ராகுல் காந்தி வருகை.

எனவே மோடி மட்டுமே நேரடியாக ஜெயலலிதாவை சந்திப்பார். பிறகு பத்திரிகையாளர்களிடம் ஜெயலலிவை சந்தித்தேன். என்னோடு காவிரி நீர் குறித்து விவாதித்தார் என்பார். ஆனால் புகைப்படம் மட்டும் வெளிவராது. ஆனால் மோடி சொல்வதை தமிழர்கள் நம்ப வேண்டும்.

மோடியுடன் ஜெயலலிதா சுயநினைவோடு சிரித்து பேசும் புகைப்படமும் வெளிவரவில்லை, ஆனால் சுயநினைவோடு அம்மா இருக்கிறார் என்றால் பொன்னையன் அதற்கு என்ன காரணம் கூறுவார்? ஒருவேளை மோடியையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றால்...?

17 நாட்களாகி விட்டன. இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த நாடகம் என்று பார்த்து விடுவோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments