மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

காரைக்குடி அருகே பள்ளி மாணவி ஒருவர் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

பின்னர் அருகில் உள்ள மானகிரி முந்திரி காட்டுக்குள் வைத்து மாணவி கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் அவரது தாயார் காரைக்குடி தெற்கு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் அந்த பகுதிக்கு சென்று சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments