ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை: ஸ்டாலின்

Report Print Deepthi Deepthi in இந்தியா

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மேலும் ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் அப்போலோ சென்றுள்ளனர். இன்று காலையில் இருந்து பல தலைவர்கள் அப்போலோ சென்று வருகின்றனர்.

முதல்வர் குறித்த தகவல்களை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், முதல்வர் விரைவில் நலம்பெற்று அவரது பணியை தொடர வேண்டும், ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் ஆகியோரிடம் முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.

ஜெயலலிதா நலம் பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஜெயலலிதாவை சந்திக்கமுடியவில்லை. திமுக தலைவர் கருணாநிதி அறிவுரையின் பேரில் மருத்துவமனைக்கு சென்றதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments