இறைதூதரை அவமதித்த கிறித்துவ பெண்: மரண தண்டனை ரத்து செய்யப்படுமா?

Report Print Peterson Peterson in இந்தியா

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய இறைதூதரை அவமதித்த குற்றத்திற்காக கிறித்துவ பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மறுவிசாரணை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Ittan Wali என்ற கிராமத்தில் Asia Bibi என்ற கிறித்து பெண் வசித்து வருகிறார்.

இந்த கிராமத்தில் கிறித்துவர்கள் வசித்து வந்தாலும் இஸ்லாமியர்களே அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு கிறித்துவர் ஒருவர் குவளையில் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற 5 இஸ்லாமிய பெண்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால், அந்த கிறித்துவ முதியவரை பார்த்ததும், அவரது ஆடை அழுக்காக இருந்ததால் தண்ணீர் குடிக்க மறுத்துள்ளனர்.

இதனை பார்த்த Asia Bibi கடும் கோபம் கொண்டுள்ளார். கிறித்துவரை அவமதித்தற்கு பதிலடி தரும் வகையில் இஸ்லாமிய இறைதூதரை அவர் அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து கிறித்துவ பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு 2010-ல் விசாரணைக்கு வந்தபோது, இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால், இந்த மரண தண்டனையை எதிர்த்து அப்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்த Salmaan Taseer என்பவர் பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பினார்.

ஆளுநரின் இச்செயலால் ஆத்திரம் அடைந்த அவரது மெய்க்காப்பாளர் ஆளுநரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதன் பிறகு சிறையில் இருந்த கிறித்து பெண்ணின் வழக்கு உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் மீண்டும் நீதிமன்றத்தில் மறுவிசாரணையை தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை தொடர்பான விசாரணையை எதிர் நோக்கியுள்ள அந்த கிறித்துவ பெண்ணிற்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments