இரவில் பார்ட்டிக்குச் சென்ற மாணவிகள்: நடந்த விபரீத சம்பவம்

Report Print Maru Maru in இந்தியா

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, அவர்கள் ஏறிய காரின் ஓட்டுனர் ஒருவரை மட்டும் தந்திரமாக கடத்திச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஏ. படிக்கும் மூன்று கல்லூரி மாணவிகள், சி.ஸ்கீம் பகுதியில் உள்ள கிளப் ஒன்றில், இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். பார்ட்டி முடிந்து வீடு திரும்ப உபெர் கார் ஒன்றை புக் செய்துள்ளனர்.

கார் வருவதற்குள் அவர்களின் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அந்த டிரைவரும் நீங்கள் புக் செய்த கார் இதுதான் என்று சொல்லி, அவர்களை ஏற்றிச்சென்றுள்ளார்.

மாணவிகள் மூவரும் தங்கள் தோழி ஒருவரின் வீட்டுக்கு காரை செலுத்தச் சொல்லியுள்ளனர். ஹர்மதா நெடுஞ்சாலை அருகே சென்றபோது, கார் பழுதாகிவிட்டதாகவும் இரண்டு பெண்கள் இறங்கி காரை தள்ளுமாறும் டிரைவர் கூறியுள்ளார்.

அதன்படி, இரண்டு பேர் இறங்கி தள்ளினர். ஒரு பெண் மட்டும் காரில் இருந்துள்ளார். தான் திட்டமிட்டிருந்தபடி, காரில் இருந்த பெண்ணுடன் வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார் டிரைவர்.

உடனே, இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு பெண்களும் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து காரை தீவிரமாக தேடிய பொலிசார், அந்த கார், தவுலத் பூரா பகுதியில் நின்றுகொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

பொலிசை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்து கடத்தப்பட்ட பெண் டிரைவர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறினார்.

உடலில் காயங்களுடன் இருந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டிரைவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments