மெளனம் கலைத்த பிரபல நடிகை: உருக்கமான வேண்டுகோள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

பிரபல பாகிஸ்தான் நடிகையான மகிரா கான் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிகழும் பதற்ற நிலை பற்றி உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யூரியில் இந்திய இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சிலரும், ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகையான மகிரா கான் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், நான் ஒரு கலைஞராக வேலைப்பார்த்து வரும் இந்த 5 ஆண்டுகள் நான் என்னால் முடிந்த அளவு எனது திறமையால், எனது நாட்டிற்கு உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்திருப்பதாக நம்புகிறேன்.

ஒரு பாகிஸ்தானியாக, உலக குடிமகள் என்ற வகையில் பயங்கரவாதம், மனிதர்கள் வாழ்க்கையை அழிக்கும் விடயம் போன்றவற்றை ஆதரிக்க மாட்டேன்.

இரத்தம் சிந்துதல் மற்றும் போர் ஆகியவற்றை கண்டு மகிழ்ச்சியடைய மாட்டேன். அது எந்த மண்ணில் நடந்தாலும் சரி. உலக மக்கள் இது இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்.

அமைதியான உலகை அமைக்க வேண்டும் என்று அனைவரிடமும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments