மகள்களை பத்து வருடமாக வீட்டு சிறையில் வைத்த தாய்: நேர்ந்த விபரீதம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வெளியிடங்களுக்கு அனுப்பினால் வேறு ஜாதி ஆண்களை காதலித்து விடுவார்களோ என்ற பயத்தில் தாய் ஒருவர், தன் இரு மகள்களையும் வீட்டு சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் திப்தூர் நகரின் அருகில் சர்தாவல்லி என்னும் கிராமம் உள்ளது. இங்கு கங்கம்மா (66) என்பவர் வசித்து வந்தார், இவருக்கு பாக்யா (38) ஸ்ரீலட்சுமி (35) என இரு மகள்கள் உள்ளனர், இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

மிகவும் பிற்போக்கு சிந்தனை கொண்ட கங்கம்மா ஊரில் யாருடன் பழகாமல் கிராமத்தை விட்டு சில தூரத்தில் தனிமையில் தன் மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக தன் இரு மகள்களையும் வீட்டு சிறையில் கால்களை கட்டி போட்டு அடைத்து வைத்துள்ளார். இதில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாக்யா சமீபத்தில் இறந்துள்ளார்.

இது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது, ஆனாலும் கங்கம்மா மீது எந்த வழக்கு பதிவும் செய்யப்படவில்லை.

இதுபற்றி பொலிசார் கூறுகையில், எங்கே தன் மகள்களை வெளியில் விட்டால் வேறு ஜாதி ஆண்களை காதலித்து விடுவார்களே என்று கருதி கங்கம்மா அவர்களை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.

மேலும் ஊட்டசத்து குறைபாடு காரணமாகவே அவரின் மூத்த மகள் இறந்திருக்கிறார் மற்றும் கங்கம்மா தன் இரு மகள்களையும் கொடுமைப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments