தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கருத்து குறித்து தாம் பதிலளிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அப்பல்லோ வந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்.

தொண்டர்களும், பொதுமக்களும் செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சம்ய பலன் கிடைக்கும்.

மருத்துவ ரீதியாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வருவது குறித்து எந்தவித தகவலும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை பற்றிய கேள்விக்கு, அதுபற்றி தாம் கருத்துகூற விரும்பவில்லை என பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments