பள்ளியில் மாணவி மர்ம மரணம்: நடந்தது என்ன?

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னையில் பள்ளிச்சிறுமி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கோ- சிலம்பரசி தம்பதியின் 9 வயது மகள் லோகமித்ரா. இவர் சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் செயல்பட்டு வரும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று பிற்பகலில் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனில்லாமல் சிறுமி மரணமடைந்துள்ளார்.

ஆனால் சிறுமி லோகமித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பெற்றோர்களிடம் கூட தெரிவிக்காமல் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் பள்ளி முதல்வர் அமல்ராஜ், பள்ளி மேலாளர் பார்த்திபன், கண்காணிப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments