ஓபிஎஸ், தம்பிதுரை, பழனிச்சாமி- அடுத்த பொறுப்பு முதல்வர் யார்?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு பணிகள் அப்படியே முடங்கி கிடக்கிறது.

முதல்வர் மருத்துவமனையில் இருந்து கொண்டு அரசு பணிகளை கவனித்து வருவதாக கூறப்பட்டாலும் மக்கள் நம்பவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த பொறுப்பு ஆளுநர், முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளரை சந்தித்து திடீர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, வேலுமணி இவர்களில் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்கலாம் என தகவல்கள் வெளியானது.

மத்திய அரசை பொறுத்தவரையில் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரையை நியமிக்கலாம் என பேசப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர் மத்தியில் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவு அதிகம் இருந்தாலும், சசிகலா இல்லாத போது கார்டனை வழிநடத்த சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.

இவர்களை விட ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே முதல்வராக இருந்தவர் என்பதால் இவரை பொறுப்பு முதல்வராக நியமிக்கலாம் எனவும் கூறப்படுகிறது, பொறுத்திருந்த பார்க்கலாம்!!!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments