கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது இந்த கேள்வி எழவில்லையே?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதலமைச்சர் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அப்பல்லோ சென்று மருத்துவர்களிடம் நலம் விசாரித்து செல்கின்றனர்.

அந்தவகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ சென்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம், முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும், விரைவில் முதல்வர் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசினார், சுமார் 40 நிமிடங்களாக நீடித்த இந்த சந்திப்பு பற்றி வைகோ கூறுகையில், இது நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே, அவர் என்னுடைய நண்பர்.

அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை, தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் போராடினோம். அப்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வராக இருந்த கருணாநிதி 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாரே அப்போது பொறுப்பு முதல்வர் கேள்வி எழவில்லையே என்று கேட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments