சென்னையில் மீண்டும் பயங்கரம்! காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் தாக்கிய நபர்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் காதலிக்க மறுத்த மாணவியை காதலன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதா என்ற பெண், பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 5ம் திகதி மேற்கு மாம்பலம் கே.ஆர்.கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ரஞ்சிதாவை வழிமறித்த நபர் தகராறில் ஈடுபட்டுள்ளார், வாக்குவாதம் முற்றவே கோபத்தில் ரஞ்சிதாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடவே, பயந்து போய் அந்த நபர் தப்பியோடி உள்ளார்.

உடனடியாக ரஞ்சிதாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ரஞ்சிதாவை தாக்கிய நபர் பெயர் யோபுராஜ், எனது மகளும், இவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.

நட்பு ரீதியில் எனது மகள் இவருடன் பேசியுள்ளார், இதை தவறாக புரிந்து கொண்ட யோபுராஜ் காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

“நான் நட்பாகத்தான் பழகினேன், காதல் உணர்வோடு உங்களோடு பேசவில்லை, பழகவில்லை” என்று எனது மகள் யோபுராஜீடம் அன்பாக எடுத்துக் கூறியிருக்கிறார், ஆனால் யோபுராஜ் அதை காதில் வாங்கவில்லை.

தினமும் எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார், இதுபற்றி தெரியவர நானும் அவனை கண்டித்தேன், கோபத்தில் எனது மகளை தாக்கியுள்ளார், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யோபுராஜை கைது செய்த பொலிசார் புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments