சென்னை வந்த ராகுல் திமுகவிற்கு கொடுத்த அதிர்ச்சி! அப்பல்லோவுக்கு விரைந்த வைகோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென அப்பல்லோவிற்கு சென்ற அவர், தனது பயணத்தை முடித்துக்கொண்டு, திமுக தலைவர் கருணாநிதி சந்திக்காமல் சென்றது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று காலை 11.15க்கு வந்திறங்கிய ராகுல், நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக கட்சியுடனான கூட்டணி குறித்து பேசுவார் என்றும் கட்சி தலைவர் கருணாநிதியை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்காமலேயே திரும்பி சென்றுள்ளார்.

இது திமுக கட்சியினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்- வைகோ

அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற வைகோ, அங்கு மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

இன்றைக்கு தமிழகத்திலேயே அனைவருடைய உள்ளத்திலும் கவலை ஏற்படுத்தியிருக்கிற காவிரி பிரச்சினையை முறையாக சட்டபூர்வமாக அணுகி உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை உணர வைத்து, பாதுகாத்து கொடுத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்தநிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறி்த்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நான் மருத்துவர்களிடம் பேசினேன்.

குறிப்பாக ரிச்சர்ட் பீலே, முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கினார்.

அப்போது அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். எங்களுடைய முதலமைச்சரின் உடல் நலத்தை குறித்த அக்கறையோடு, உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய வைத்தியத்திலேயே நலமாக இருப்பதை நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார்.

எனவே முதலமைச்சர் ஜெயலலிதா, முழு உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று இயற்கை அன்னையுடைய அருளை நான் யாசிக்கிறேன் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments