ஜெயலலிதாவை சந்திக்கிறார் மோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெயலலிதாவை சந்திப்பதற்காக பிரதமர் மோடி அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவிருப்பதாக பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 17 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு நாட்களில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments