நடுவானில் மரணமடைந்த குழந்தை: பெற்றோர், பயணிகள் கண்ணீர்

Report Print Arbin Arbin in இந்தியா

இதய நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு மாத குழந்தை இறந்ததை அடுத்து பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தனியார் விமானம் ஒன்று நேற்று காலை 9:00 மணிக்கு புறப்பட்டது.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாத ஆண் குழந்தைக்கு பெங்களூரில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்த பெற்றோர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் குறிப்பிட்ட குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முதலுதவி அளித்தும் பயனேதும் இல்லை என்ற நிலையில், விமானத்தை சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

அங்கிருந்து ஷாந்தி நகர் மருத்துவமனைக்கு குழந்தையுடன் பெற்றோர் விரைந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் குழு பரிசோதித்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதை கேட்டு குழந்தையின் பெற்றோரும், சக பயணிகளும் கண்ணீர் விட்டனர். இதன்பின் எஞ்சிய பயணிகளுடன் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பெங்களூரு சென்றது.

சமீபத்தில் சவுதி விமானம் ஒன்று அமெரிக்கா செல்லும் வழியில் நடுவானில் வைத்து பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கெய்ரோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments