8 மணி நேரம் பெருவெள்ளத்தில் சிக்கித்தவித்த 14 வயது சிறுவன்

Report Print Arbin Arbin in இந்தியா

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 14 வயது சிறுவன் 8 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூரில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு மக்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. சிலர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குண்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு (14), தந்தை கொண்டலு (35), தாய் சுப்புலு (25) மற்றும் தங்கை வனஜா (10) ஆகிய நால்வரும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெங்கடேஸ்வரலு என்ற சிறுவன் அங்குள்ள ஒரு மரத்தில் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளான்.

இந்நிலையில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன் அங்கிருந்த ஒரு மரத்தை பிடித்துக் கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு குரல் கொடுத்தான்.

ஆனால், அந்த பகுதியில் யாரும் வராததால் சிறுவன் பரிதவித்து போனான். பின்னர், சுமார் 8 மணி நேரம் மரத்தில் தொங்கி போராடிய சிறுவனை அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்து நிர்வாக குழுவினரிடம் உதவிக் கோரினார்.

இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் சிறுவனை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நீர் அதிகமாக இருந்ததால் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. இறுதியாகக் கிராமத்தினர் கயிறு மூலம் சிறுவனை காப்பாற்றினர்.

இச்சம்பவம் குறித்து சிறுவன், 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளான். கிராமத்தினர் இல்லையெனில் தானும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருப்பேன் என்று கண்ணீர் மல்க நன்றி கூறினான்.

அப்பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments