வைரலாகும் சுவாதி ராம்குமார் உரையாடல்!

Report Print Basu in இந்தியா

சுவாதியும் ராம்குமாரும் பேசிக்கொள்வது போல், ஒரு உரையாடல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு.....

சுவாதி: ராம்குமார் என்னாச்சு நீ நேற்று தற்கொலை செய்து கொண்டாயா?

ராம்குமார்: நீதான் சுவாதியா? உன்னை இப்பதான் பார்க்கின்றேன். உன்னை கொலை பன்னதா தான், என்ன கைது பன்னி இப்ப கொலையும் பன்னிடாங்க.

சுவாதி: ஸாரி ராம், இனிமேலாவது என்னை கொலை பன்னவனை புடிப்பாங்களா?

ராம்குமார்: சத்தியமா உன்னை கொன்னவனையும் என்ன கொன்னவனையும் பிடிக்கவே மாட்டாங்க.

சுவாதி: அப்ப நமக்கு நியாயமே கிடைக்காதா? நமக்காக யாரும் நியாயம் கேட்டு போராட மாட்டாங்களா?

ராம்குமார்: நமக்காக நியாயம் கேட்டு யார் வந்தாலும், இங்க நம்ம இடத்துக்கு அனுப்பி வச்சுருவாங்க. வேனும்னா பாரு இன்னும் இரண்டு நாள்ல தீலிபன் மகேந்திரனையும் தமிழச்சியையும் இங்க அனுப்பி வைப்பாங்க.

சுவாதி: என் கொலைக்கு உன்னை ஏன் ராம் யூஸ் பன்னாங்க?

ராம்குமார்: அதான் எனக்கே புரியலை.

சுவாதி: நீ இறந்த அப்ப, உங்க அப்பா அழுததை பார்த்து கஷ்டமா இருந்துச்சு. அப்பதான் ஒன்னு புரிஞ்சுச்சு. பெத்த அப்பனுக்கும், மத்த அப்பனுக்கும் உள்ள வித்தியாசம்.

ராம்குமார்: ஆமா உன்னை வாயில வெட்டுனாங்க, என்னை கரண்ட்ட வாயில கடிச்சு செத்தேன்னு பொய் சொல்றாங்க. இதுக்கு முன்னாடி என் கழுத்தை அறுத்து வாய் பேச விடாம ஆக்குனாங்க. ஏன் இவுங்க வாய் மேலயே குறியா இருந்தாங்க?

சுவாதி: மரண நேரத்துல கூட வாய தொறந்து பேச கூடாதுன்னு தான் ராம்.

ராம்குமார்: இன்னும் சிலர் சாவாங்கன்னு தெரியுது. எத்தனை பேரை கொன்றாவது உன்னை கொன்னவனை காப்பாத்த முடிவு பன்னிட்டாங்க சுவாதி.

சுவாதி: ராம், நீ நிஜமா தற்கொலைதான் பன்னுனியா?

ராம்குமார்: நான் ஏன் தற்கொலை பன்னனும், என்னை பிடிக்கும் போதே சொன்னாங்க, 2 மாசத்துல விட்டுருவோம் அதுவரை அமைதியா இருன்னு, எனக்கு ஜாமின் கிடைச்சி வெளியே போக போறேன் தெரியும், பின்ன ஏன் நான் சாகனும், 12 அடி மேல இருக்க வயரை புடிச்சு கடிக்க, உள்ள என்ன ஏணியா இருக்கு? அப்பிடினா என் தற்கொலையை தடுக்க முடியாத காவலர்களை என்ன வேலைய விட்டு தூக்கிட்டாங்களா?

சுவாதி: உன்னை கொல்லும் போது நீ சத்தம் போடலையா?

ராம்குமார்: அதுக்கு ஓரு மணிநேரத்துக்கு முன்னாடி காப்பி குடுத்தாங்க. அப்புறம் என்னாச்சுன்னு எனக்கு தெரியல.

இவ்வாறு இறந்த இருவரினதும் உரையாடல்கள் காணப்படுகின்றன.

மேலும், அந்த உரையாடலின் முடிவில் ஒரு குறிப்பும் போடப்பட்டுள்ளது.

(இது இறந்தவர்களை கேலி செய்வதற்காக அல்ல. இவர்களை இவ்வுலகை விட்டு காலி செய்தவர்களை தப்ப விடாமல் வேலி போடுவதற்காக) என்று அந்தக் குறிப்பில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments