"என் வழி தனி வழி".. ரஜினியை போல் பேசி அசத்திய டோனி

Report Print Jubilee Jubilee in இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்தை பேசி அசத்தியுள்ளார்.

பாலிவுட்டில் கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி புதிய படம் ஒன்று உருவாகியிருக்கிறது. வருகிற செப்டம்பர் 30ம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய டோனி, சென்னை என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. சென்னையில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் டெஸ்ட் விளையாட்டை தொடங்கினேன். எனக்கு சென்னையை ரொம்பவும் பிடிக்கும் என்றார்.

மேலும், மேடையிலே நடிகர் ரஜினிகாந்தின் "என் வழி தனி வழி" என்ற வசனத்தை பேசி அனைவரையும் அசத்தினார் டோனி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments