அனல் பறந்த காவிரி விவாதம்: ஜாலியாக கோலம் போட்டு விளையாடிய அமைச்சர்

Report Print Jubilee Jubilee in இந்தியா

கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த போது அமைச்சர் உமாஸ்ரீ பேப்பரில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருந்தது.

பாஜகவை சேர்ந்தவரான முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரி விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் உமாஸ்ரீ பேப்பரில் ஜாலியாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இது கன்னட ஊடகம் ஒன்றின் கேமராவில் பதிவானது.

காவிரி விவகாரம் முக்கியமானதாக உள்ள நிலையில், உமாஸ்ரீ அந்த விவாதத்தை கவனிக்காமல் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments