ஜெயலலிதா உடல்நிலை மோசமாக என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் நுரையீரலில் நீர் கோர்த்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது நலமுடன் இருப்பதாகவும், நண்பகலில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தொண்டர்கள் விடிய விடிய சாலைகளில் காத்திருந்த வண்ணம் உள்ளனர்.

அமைச்சர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

24 மணிநேரம் உழைத்ததே இதற்கு காரணம்: நாஞ்சில் சம்பத்

தமிழக மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்ததே உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்று தந்தது, மெட்ரோ ரயில், ஏழை மாணவர்களுக்கான திட்ட உதவிகள் என வேலைப்பளு இரண்டு நாட்களாக அதிகமாக இருந்தது.

நேற்றிரவு உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட பேசிக் கொண்டிருந்தார்.

தமிழக மக்களுக்காக 24 மணிநேரத்தில் ஓய்வெடுக்காமல் 20 மணிநேரம் உழைக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சி.ஆர்.சரஸ்வதி, ஜெயலலிதாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாகவும், அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும் அதனால் வந்த விளைவு தான் இது எனவும் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதில் இருந்து கர்நாடகாவில் பல்வேறு வன்முறைகள் நடந்த வண்ணம் உள்ளன.

தமிழர்கள் தாக்கப்படுவது, தமிழக வாகனங்களை சூறையாடுவது என கர்நாடகத்தினர் போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தமே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக காரணம் என்ற பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பாவும் அதிமுக பற்றி அடிக்கடி சர்ச்சை தகவல்களை வெளியிட்டு வருகிறார், இதுவும் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அமைச்சர்கள் குவிந்தனர்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

தேனி சென்றிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சென்னைக்கு விரைந்துள்ளார்.

ஜெயலலிதாவை பார்க்க உள்ளே சென்ற நிலையில் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து கொண்டு அம்மாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments