விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள்...கோவில்களில் வழிபாடு! ஜெயலலிதாவுக்கு என்னாச்சு?

Report Print Fathima Fathima in இந்தியா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நண்பகலில் வீடு திரும்புவார் என்றும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் ஏராளமான பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர், இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடிய விடிய தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அமைச்சர்களும் குவிந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதா பூரணநலம் பெற வேண்டிய ஏராளமான தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments