நாட்டுக்காக உயிரை துறந்த வீரர்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறேன்: வலியை உணர்ந்த மாமனிதர்

Report Print Santhan in இந்தியா

உரி தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 18 இராணுவவீரர்களின் குழந்தைகளை தான் படிக்க வைக்கிறேன் என பிரபல தொழில் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் உரி நகர் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் இராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 18 இராணுவ வீரர்கள், 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்திய நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 18 இராணுவ வீரர்களின் குடும்பங்களும் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர். அதில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதால் அவர்கள் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதை உணர்ந்த இந்தியாவின் சூரத் மாநகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகேஷ் சவானி இந்திய நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 18 இராணுவ வீரர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கான படிப்பு செலவு அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உரி தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் மகன் ஒருவர் தன் தந்தை தங்களை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் தற்போது அவர் இறந்து விட்டார் என்று கூறி அழுதது தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதன் காரணமாகவே உரி தாக்குதலில் உயிரிழந்த அனைத்து இராணுவவீரர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவை தான் ஏற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்ததாக தெரிவித்தார்.

மேலும் குழந்தைகள் அனைவரும் தன்னுடைய நிர்வாகமான பிபி சவானி இண்டர்நேஷனல் பள்ளியில் உள்ள விடுதியில் இலவசமாக தங்கி படித்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments