முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கபட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

“ஜெயலலிதா காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்போது நலமாக இருக்கிறார்,” என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத்துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments