ஆடைகளில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த வாலிபர்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த செவிலியர்களின் அறைக்குள் புகுந்து அவர்களின் ஆடைகளின் மேல் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்துள்ளார்.

இந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்குவதற்கு ஒரு அறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறையில் செவிலியர்கள் தங்களது ஆடைகளை வைத்திருப்பார்கள்.

இந்நிலையில், இந்த அறைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், செவிலியர்கள் அணியும் சுடிதார்களை திருடிச்சென்றுள்ளார். அதன்பின்னர் அந்த ஆடைகளை மருத்துவமனையில் உள்ள ஒரு ஒதுக்குபுறத்தில் வைத்து அதன்மீது படுத்து உருண்டு, முத்தமழை பொழிந்துள்ளார்.

இந்த நபரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த நோயாளி ஒருவர், நீங்கள் யார்’ என்று கேட்டுள்ளார். சத்தம் கேட்டு மற்ற நோயாளிகள் வந்தனர். அதற்குள் மூகமூடி வாலிபர் தப்பி விட்டார். இதனால் பரபரப்பு நிலவியது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கமெரா மூலம் நடந்தவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த காட்சியின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments