பெண்ணிடம் இரவில் கொள்ளை அடிக்க முயற்சி: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகளை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் கடந்த 18ஆம் திகதி இரவு நேரத்தில் சினேகலதா என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் வந்த கும்பலொன்று அவரிடம் உள்ள பணம், நகைகளை கொள்ளை அடிக்க முயற்சி செய்தது.

அருகில் இருந்த சேகர் என்ற நபர் சினேகலதாவை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.

இது தொடர்பாக பொலிசிடம் புகார் செய்யப்பட அவர்கள் மீன்குழம்பு கார்த்திக், அருணாச்சலம் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதற்கிடையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கார்த்திக் உயிரிழந்தார்.

இதனை கண்டித்து கார்த்திக் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீச பஞ்சாயத்து நீதிமன்றம் வரை போயுள்ளது.

இதனிடையில் CCTV கமெராவில் பதிவாகியுள்ள அந்த கொள்ளை முயற்சி சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில் தற்போது பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments