24 முறை குத்திக் கொலை செய்தது ஏன்? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

டெல்லியில் ஆசிரியை ஒருவரை 24 முறை குத்திக்கொலை செய்த கொலையாளி பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் கருணா(21) என்ற ஆசிரியரை சுரேந்தர் சிங் என்பவர் பலருக்கும் மத்தியில் கத்தியை கொண்டு 24 முறை குத்திக் கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

இது சம்பந்தமான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பொலிசார் சுரேந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது சுரேந்தர் சிங் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

விசாரணையில், கடந்த 2012 ஆம் ஆண்டுகளில் இருந்தே தானும் கருணாவும் ஒன்றாக பழகி வந்ததாகவும், ஒரு வருடத்திற்கு முன்னர் தான் தாங்கள் இருவரும் பிரிந்ததாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் கருணா, மோகித் என்பவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற புகைப்படத்தை பார்த்தேன்.

இதனால் கருணாவின் பேஸ்புக் பக்கத்தை ஹேக்செய்து பார்த்த போது, அதில் இருவருடைய அந்தரங்க உரையாடல்களை கண்டு தான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதனால் ஆத்திரமடைந்து கருணா-வை நேரில் பார்த்து கண்டித்தேன். தன் ஆத்திரத்தை அடக்கமுடியாத காரணத்தினால் அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து தாக்கினேன். அது கருணாவின் பையில் விழுந்தது.

அப்போது கருணா இதைக்கூட சரியாக பிடிக்க தெரியவில்லை, நீ எல்லாம் என்ன செய்யப்போகிறாய் என கிண்டல் அடித்தார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான், அவரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல முறைத் தாக்கி குத்தி கொடூரமாக கொலை செய்ததாக சுரேந்தர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments