ராம்குமாரின் வழக்கில் இன்று தீர்ப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா

ராம்குமார் பிரேத பரிசோதனையில் தங்களது தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

கடந்த யூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் இன்ஜினீயர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக நெல்லையை சேர்ந்த ராம்குமாரை கைது செய்த பொலிசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 18ம் திகதி புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் சிறையில் கொலை செய்யப்பட்டு விட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments