ராம்குமாரின் தந்தையை பார்க்க மறுத்த கருணாநிதி: காரணம் என்ன?

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்கச் சென்ற ராம்குமார் தந்தையை, கருணாநிதி பார்ப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த 18 ஆம் திகதி சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அரசியல் பிரமுகர்கள் சிலர் இது தற்கொலை இல்லை என்றும் ராம்குமாரை பொலிசார் தான் கொலைசெய்திருக்க முடியும் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் இது தற்கொலை மாதிரி தெரியவில்லை எனவும், இதில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராம்குமார் தந்தை பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்புவும் ராம்குமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக இன்று கருணாநிதியை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் கருணாநிதியோ இவர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராம்குமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதால், இதில் தலையிடமுடியாது எனவும், அதையும் மீறி கருணாநிதி தலையிட்டால் இது அரசியலாக்கப்பட்டு உண்மையான குற்றவாளி தெரியாமல் போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் காரணம் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments