ஓய்வு பெற்றார் மெல்லிசை குரலின் ராணி

Report Print Aravinth in இந்தியா

சினிமா துறையில் சிறந்த பின்னணி பாடகியாக கொடிகட்டி பறந்த ஜானகி தற்போது தனது 60 ஆண்டுகால இசை பயணத்திற்கு சுபம் என முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி ஜானகி, 1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு என்ற படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர்.

இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், சுமார் 60 ஆண்டுகளாக பாடி வந்த இவர் தற்போது அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்போவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் இசை பயணத்திற்கு ஓய்வை அறிவிக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு மிகவும் பிடித்த மலையாள தாலாட்டு பாடல் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.

இதுதான் என்னுடைய கடைசி பாட்டாக இருக்கும், எனக்கு வயதாகி விட்டது, பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments