தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அந்த கட்சியின் தலைமை திருநாவுக்கரசரை புதிய தலைவராக அறிவித்தது.
இந்நிலையில் திருநாவுக்கரகர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் ஆகியோரை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.