கார் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டவர், தானாக முன்வந்து காரின் முன்பு தற்கொலை செய்து கொண்டது சிசிடிவி காட்சியின் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஹைதராபாத்தின் முக்கிய சாலையான லாங்கர் ஹவுஸ் பாலத்தில் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கார் மோதியதில் இறந்ததாக செய்திகள் வெளியானது.
இதனால் கார் ஓட்டி வந்த பாரி என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது வழக்கின் திருப்பமாக கார் விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர், தானாகவே கார் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அதில் வாகனங்கள் பல செல்லும் போது, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர், திடீரென காருக்கு அடியில் விழுந்துவிடுகிறார்.
காரை நிறுத்த முற்பட்டும் காரின் முன்சக்கரங்கள் அவரின் உடலில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்காட்சிகளை கண்ட பொலிசார், பாரி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை மறுபரீசிலனை செய்வதாகவும், காரை வேகமாக ஓட்டி வந்ததற்காக பாரி மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.