திருப்பதியில் மொட்டையால் மட்டுமே 17 கோடி பணமா? அதிர்ச்சி தகவல்

Report Print Abhimanyu in இந்தியா

பணக்காரக்கடவுள் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் கடவுள் திருப்பதி ஏழுமலையான் தான்.

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தகோடிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

அதுமட்டுமல்லாது அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருமே இங்கு வருகைதந்து ஏழுமலையானின் அருளை பெற்று செல்கின்றனர்.

இக்கோயிலில் முடி காணிக்கை செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.

இவ்வாறு காணிக்கை செலுத்தப்படும் முடியை கோயில் நிர்வாக சபை ஏலத்திற்கு விடுகின்றது.

இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை மாத முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாத முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments