தாய், தந்தையை இழந்து தவிக்கும் மாயிஷா! மனதை உருக்கும் சோகக் கதை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தாய், தங்கையை இழந்த நிலையில் மாயிஷா என்ற 7 வயது சிறுமி தற்போது தந்தையையும் இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த திருத்தணி அருகே அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புஷ்பா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மாயிஷா(7), ரஞ்சனா(5) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகம் சென்னையில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்துள்ளார்.

அவ்வப்போது திருத்தணி சென்று குடும்பத்தினரை பார்த்துவிட்டு வருவார்.

இந்நிலையில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படவே, புஷ்பா ரஞ்சனாவை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துவிட்டார்.

இதனையடுத்து தாய், தங்கையை இழந்து தவித்த மாயிஷாவை அவரது பாட்டி எடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 18ம் திகதி இரவில் ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவருக்கு பேராபத்து காத்திருந்தது.

குடிபோதையில் காரை ஓட்டி வந்த விகாஸ் ஏற்படுத்திய விபத்தில் ஆறுமுகம் பரிதாபமாக பலியானார்.

தீயின் கோரப்பசிக்கு தாயையும், விபத்தில் தந்தையையும் பறிகொடுத்து தவிக்கிறாள் மாயிஷா.

தந்தை இறந்த சோகத்தில் அழக்கூட தெரியாத விளையாட்டு பிள்ளையாக இருக்கும் மயிஷாவை அவரது பாட்டி கவனித்து வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments