இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Santhan in இந்தியா

ஒடிசாவில் இறந்த தாயின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்லாமல் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குணா. இவருடைய தாய் பானா திரிகா(65), கடந்த சில தினங்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் குணா, தன் தாயை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக கட்டாக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள், சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையிலிருந்து தன் சொந்த ஊருக்கு 4 கி.மீற்றர் தூரம் என்பதால், குணா, தன் தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஊழியரிடம் விலை பேசியுள்ளார்.

ஆனால் அவரோ அதிகமாக கேட்டுள்ளார், பணம் இல்லாத காரணத்தினால் மனமுடைந்த குணா அருகில் இருந்த தள்ளுவண்டியில் தன் தாயின் சடலத்தை வைத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.

தன் தாயின் சடலத்தை கொண்டு சென்ற குணாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments