உரி தாக்குதல்: பழிக்கு பழி தீர்த்த இந்திய ராணுவம்

Report Print Aravinth in இந்தியா

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது.

இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து, புது புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் கூறுகையில், ‘ஆரம்பக் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜெய்‌ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது தான் உண்மை தெரிய வந்துள்ளது. லஷ்கர் தீவிரவாதிகள் இவர்கள் ராணுவ தலைமையகத்தின் கம்பி வேலிகளை இரண்டு இடங்களில் துண்டித்து 150 மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தாக்குதல் குறித்த ஆதாரம் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் பாகிஸ்தானில் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என அந்நாடு உறுதி அளித்திருந்ததையும் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உரி தாக்குதலில் பழி தீர்த்த இந்திய ராணுவம்

உரி தாக்குதலில் பழி தீர்க்கும் விதமாக ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று, 20 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments