ராம்குமார் எப்.ஐ.ஆர் ரெடி: சொல்லப்படுவது என்ன?

Report Print Santhan in இந்தியா

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் சுவிட்ச் வயர் கடித்து தான் தற்கொலை செய்து கொண்டார் என பொலிசாரின் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த 18 ஆம் திகதி சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இது தற்கொலை அல்ல கொலை என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராம்குமார் தற்கொலை குறித்து மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், சென்னை புழல் சிறையில் உள்ள காவலர்கள் ராம்குமார் மரணம் குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, ராம்குமார் யூலை 4 ஆம் திகதி முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம்குமார் தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறியதால், சிறைக்காவலர் அவர் தண்ணீர் குடிப்பதற்காக சிறைக் கதவை திறந்து விட்டனர்.

தண்ணீர் குடிக்க சென்ற ராம்குமார் திடீரென தண்ணீர் பானத்திற்கு அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட சிறைக்காவலர் அவரை லத்தியால் அடித்து காப்பற்ற முற்படும் முன் அவர் கீழே மயங்கி விழுந்துவிட்டார்.

இதனால் வயர்லெஸ் மூலம் சிறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன், பணியில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.

மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கூறிய காரணத்தினால், ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக கூறினர் என எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments