அப்துல்கலாமின் பெயருக்கு விதித்த தடை நீக்கம்

Report Print Aravinth in இந்தியா

இந்தியாவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அபதுல்கலாம் அவர்களின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அப்துல்கலாம் பெயரையும் புகைப்படத்தையும் லட்சிய இந்திய கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்துல் கலாம் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து லட்சிய இந்திய கட்சியின் தலைவரான பொன்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசியல் கட்சிகள் தேசத் தலைவர்களின் பெயர்களையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவதை தடுக்க இயலாது என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுரேஷ், அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படம் அடங்கிய சின்னத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments