தங்க மனிதனாக வலம் வரும் சாதாரண காய்கறி வியாபாரி

Report Print Arbin Arbin in இந்தியா

ராஜஸ்தானில் சாதாரண காய்கறி வியாபாரம் செய்துவரும் நபர் ஒருவர் தங்கம் மீது கொண்ட மோகத்தால் தங்க மனிதராக வலம் வருகிறார்.

ராஜஸ்தானில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சாதாரண நபரான கன்ஹாயாலால், சித்தோர்கரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 வருடத்திற்கு பின்பு 10 டோலாஸ்களை (ஒரு டோலா என்பது 10 கிராம் தங்கமாகும்) அவரது நண்பர்கள் பரிசு அளித்தனர்.

அதன்பின்னர் தங்க நகைகளை எப்போதும் அணிந்து வலம் வரும் கன்ஹாயாலால், தங்கமனிதன் என்று அழைக்கப்படுகிறார்.

தற்போது 2.5 கிலோ மதிப்புள்ள தங்க கடிகாரத்தை கன்ஹாயாலால், அணிந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.72 லட்சமாகும். இதனால் தங்கமனிதன் என்று அழைக்கப்பட்ட அவர், தற்போது கோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கன்ஹாயாலால் மாவட்ட பாஜக தலைவராகவும். காட்டிக் சமூகத்தின் தலைவராகவும் உள்ளார்.

75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கடிகாரத்தை அணிந்து கொண்டு, சித்தோர்கரில் பேருந்து நிலையத்தில், ஸ்டால் போட்டு காய்கறிகளை விற்று வரும் கன்ஹாயாலால், தனக்கென்று பிரத்யேகமாக பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதில்லையாம்.

எவ்வித பாதுகாப்பும் இன்றி, லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகளை அணிந்து வலம் வரும் அவரை உள்ளூர் மக்கள் ஹீரோ என்று அழைக்கிறார்கள்.

கன்ஹாயாலால் மட்டுமின்றி அவரது மனைவியும், தங்கம் அணிவதில் அதிக ஆர்வமுடையவராம். அவர் சாதாரண நாட்களில் 3.5 கிலோ தங்கம் அணிகிறாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments