90 வயது மூதாட்டிக்கு கத்தி முனையில் நேர்ந்த கொடூரம்: காம கொடூரனுக்கு வலைவீச்சு

Report Print Basu in இந்தியா

கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி கத்தி முனையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் மாவட்டம் கடக்கல் பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவரும் மூதாட்டியை பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

சம்பவம் குறித்து மூதாட்டி கூறுகையில், அவன், பின் கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். என்னைத் துன்புறுத்த வேண்டாம் என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இன்றுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் சட்ட உதவி கொடுக்கத் தயாராக இல்லாததால், சம்பவம் தாமதமாக வெளிவந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments