தன்னை விட பெரிய விலங்கை விழுங்கிய மலைப்பாம்பு: கமெராவில் பதிவான அரிய காட்சி!

Report Print Basu in இந்தியா

குஜராத் மாநிலத்தில் 20 அடி நீள மலைப்பாம்பு தன்னை விட பெரிய இரையை விழுங்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

மலைப்பாம்பை முதலில் கண்ட விவசாயி ஒருவர் உடனே ஜூனாகத் பகுதியில் உள்ள Girnar வனவிலங்கு சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் கூறியதாவது, மலைப்பாம்பு ஒன்று பெரிய விலங்கை விழுங்கியதாக விவசாயி ஒருவர் அழைப்பு விடுத்தார்.

உடனே எங்கள் மீட்பு குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து பார்த்தபோது சுமார் 18 முதல் 20 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு சிறு கொம்புடைய மான்வகையான நிலகியை விழுங்கி இருந்தது.

தற்போது கூண்டில் அடைக்கப்பட்டுள்ள மலைப்பாம்பை இரை ஜீரணமான பிறகு காட்டில் வெளியிடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments