இந்தியாவை தாக்க வரும் “ஸோம்பிகள்”

Report Print Abhimanyu in இந்தியா

பாகிஸ்தான், ஐஎஸ் தீவிரவாதம் போன்றவை குறித்து இந்தியா அச்சம் தெரிவித்துவரும் சூழல் யாவரும் அறிந்ததே, தற்போது ஸோம்பிகள் எனப்படும் நடமாடும் பிணங்கள், ஏலியன்கள் போன்றவை பற்றி அச்சம் தான் இந்தியாவை தாக்க உள்ளதாக மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பையை சேர்ந்த அஜய் குமார் என்ற நபர், தகவல் அறியும் சட்டத்தை உபயோகப்படுத்தி, ரூ.10 செலவு செய்து, மத்திய அரசிற்கு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அதில், தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை மத்திய அரசு சமாளித்து வருவதால், இந்தியா அதனை பற்றிய பயம் கொள்ளத்தேவையில்லை. எதிர்காலத்தில் ஏலியன்கள், ஸோம்பிகள் எனப்படும் மனிதர்களை தின்னும் பிணங்கள் போன்றவை தான் இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளதாக கூறி பீதியை கிளப்பியுள்ளார்,

மேலும் அவற்றை சமாளிக்க ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” இல்லாமல், மத்திய அரசால் செயல்பட முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்ட நபரை மேற்கோள் காட்டி, டுவிட்டரில் தனது பதிவின் மூலம் கிண்டல் செய்துள்ளார்.

நடைமுறையில் சாத்தியமற்ற ஒர் விடயத்தை தெரிவித்து, அரசு ஊழியர்களின் நேரத்தை வீணடிக்கும் இத்தகைய செயல்களை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments