கார் மோதி 3 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட உடல்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

தெலுங்கானாவில் விபத்தை ஏற்படுத்திய கார் உயிரிழந்தவரின் உடலை 3 கி.மீ தூரம் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19ம் திகதி ஜட்செர்லா நகருக்கு அருகில் ஒருவர் சாலை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் அவரை தூக்கி வீசியது. இதில் தூக்கி வீசப்பட்ட நபர் மீண்டும் கார் கூரையின் மீது விழுந்து இறந்துள்ளார்.

இதைத் கண்டுகொள்ளாத டிரைவர் காரை தொடர்ந்து செலுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் காரை பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மச்சரம் என்ற பகுதியில் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

காரில் அடிபட்டு இறந்தவர் பெயர் சீனிவாசுலு என்பதும் அவர் கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. அவரது உடல் சுமார் 3 கி.மீ தூரம் காரின் மேற்பகுதியில் இருந்துள்ளது.

அதேபோல் விபத்தை ஏற்பத்தி விட்டு தலைமறைவாகிய 38 வயதான நபரை பொலிசார் தேடி வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த அவரது வீடு பூட்டப்பட்டு இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு உடலை காரின் மேற்கூறையில் வைத்துக் கொண்டு சுற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments