ராம்குமாரை தற்கொலைக்கு தூண்டியது இதுதானா! பரபரப்பு தகவல்கள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமாரை சக கைதிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடத்தியதே அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த யூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் இன்ஜினீயர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக நெல்லையை சேர்ந்த ராம்குமாரை கைது செய்த பொலிசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறையில் ராம்குமார் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை தெளிவான விளக்கங்கள் எதுவும் தரப்படாததால், தொடர்ந்து பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன. அவர் சிறையில் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு சிறையில் மன அழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ராம்குமாருக்கு கவுன்சிலிங் மூலம் மன அழுதத்தை குறைப்பதற்கான சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர், கைதிகள் சிலரால் அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சில கைதிகள் கூட ராம்குமாரை பயமுறுத்தும் விதத்தில் பேசியதாக தகவல் உண்டு. அது போன்ற கைதிகளை ராம்குமாரை சந்திக்க விடாமல் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர்.

முன்பு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரிடன் அதே மனநிலை தொடர்ந்து காணப்பட்டது. அவர் யாரிடமும் மனம்விட்டு பேசமாட்டார்.

என்னிடம் கூட மனம்விட்டு பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். ராம்குமாரின் சாவுக்கு கண்டிப்பாக சிலரின் தூண்டுதல் பின்னணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

மாஜிஸ்திரேட்டு விசாரணையில் கண்டிப்பாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments