என் பேச்சை கேட்கல! கட்சி தாவிய தேமுதிக எம்எல்ஏ

Report Print Raju Raju in இந்தியா

தன்னுடைய கருத்தை கேட்க மறுத்ததால் தேமுதிக எம்எல்ஏ கட்சி தாவிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து தேமுதிக கட்சி பாதாளத்தில் கிடக்கிறது. அக்கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி திமுக உட்பட மற்ற கட்சியில் இணைகின்றனர்.

இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று தேமுதிக எம்எல்ஏ அருட்செல்வன் திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைந்து விட்டார்.

நேற்று நடந்த தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சில ஆலோசனைகளை கூறியதாக தெரிகிறது.

இதெல்லாம் சரியா வராதுங்க என விஜயகாந்த் கூற டென்ஷனான அருட்செல்வன் திமுக-வில் இணைந்துவிட்டதாக தெரிகிறது.

இவரது ஆதரவாளர்களான தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் த.லோ.பரமசிவம், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.ஜெயபிரகாசும் தன்னுடன் இணைத்துக் கொண்டாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments