இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Jubilee Jubilee in இந்தியா

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கடுமையான மற்றும் மித நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நிலஅதிர்வு மையம் எச்சரித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் சார்பில் நிலஅதிர்வு தொடர்பான புதிய வரைபடம் ஒன்று ஆப்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் வீடு அல்லது அலுவலகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வகையில் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் சுமார் 59 சதவீத நிலப்பகுதிகள் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் 30.4 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவர் என்றும், 95 சதவீதம் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments