நடிகர் விஷாலின் தாராள மனம்!

Report Print Raju Raju in இந்தியா

கார் மோதியதில் பலியான ஆட்டோ ஓட்டுனரின் மகள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக நடிகர் விஷால் அவர் குடும்பத்துக்கு உறுதியளித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் அதிகாலை வேளையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த 13 ஆட்டோக்கள் மீது மோதி சேதப்படுத்தியது.

அதில் ஒரு ஆட்டோவில், உறங்கி கொண்டிருந்த ஓட்டுனர் ஆறுமுகம் (29) கார் மோதியதில் படு காயமடைந்து உயிரி ழந்தார்.

திருத்தணியில் உள்ள அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்துக்கு மனிஷா(7) என்ற மகள் இருக்கிறாள்.

இந்த துயர சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட நடிகரும், தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளருமான விஷால் அந்த சிறுமியின் படிப்பு செலவை முழுவதுமாக தான் ஏற்றுக் கொள்வதாக அந்த குடும்பத்தாரிடம் உறுதியளித்துள்ளார்.

விஷாலின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments