காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க இவர் தான் முக்கிய காரணமா?

Report Print Santhan in இந்தியா

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழத்திற்கு தண்ணீர் வருவதற்கு இவர் தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாக பிரச்சனை எழுந்து வருகிறது.

இது தொடர்பாக எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இது சம்பந்தமான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளன.

தற்போது கூட இரு மாநிலங்களுக்கும் இடையே கடுமையான போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் படி உத்திரவிட்டுள்ளது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்கும் பட்சத்தில் இது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் மன்னார் குடி ரங்கநாதன் என்றும், இவர் தான் காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை முதன் முதலில் வழக்கை எடுத்துச் சென்றார் எனவும் அதன் பின் தான் தமிழக அரசு இதில் வந்து சேர்ந்து கொண்டது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments