சிறுவன் பலாத்காரம் செய்த சிறுமியின் வயிற்றில் கரு: மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழ்நாட்டில் சிறுவன் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமான சிறுமியின் கருவை கலைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தான், இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் அந்தக் கருவைக் கலைக்க உத்தரவிட வேண்டும் என்று சிறுமியின் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சிறுமிக்கு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் கருவை பரிசோதனை செய்ததில் அவரின் கரு 20 வாரங்களுக்கு மேல் ஆனதை கண்டறிந்தனர்.

வயிற்றில் வளரும் கரு 20 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே அதைக் கலைக்க முடியும் என்றும், அப்போது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பான உத்தரவில், இந்திய கருக்கலைப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்டவர்கள் 18 வயதைக் கடந்திருந்தால் கருவைக் கலைக்க அவர்களது ஒப்புதல் அவசியம்.

ஆனால், இந்த வழக்கில் போக்ஸோ சட்டம் தலையீடு உள்ளது. அந்தச் சட்டத்தின் ஒரு பிரிவில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு அவர்களது அனுமதியோ, ஒப்புதலோ தேவையற்றது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தற்போது 18 வயது பூர்த்தி அடைந்து விட்டார், அவர் கருவை சுமக்க விரும்புகிறார், எனவே மனுதாரருடைய மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments